Date:

நுவரெலியாவில் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து (photos)

நுவரெலியா நிருபர் – செ.திவாகரன்

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக பஸ் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளை செலுத்திச் சென்றவர்கள் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெளிமடையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் நுவரெலியாவில் இருந்து பொரகஸ் பிரதேசத்தை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது .

குறித்த விபத்தானது மோட்டர் சைக்கிளில் பயணித்த திசையில் நுவரெலியாவிலிருந்து மீபிலிமான நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டர்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...