ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டதாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் தலைவர் எடுத்த முடிவின்படி இந்த பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகத்தை பொறுப்பேற்குமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.