நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையை 1045 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையை காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை இவ்வாறு 1045 ரூபாவினால் அதிகரிப்பதற்கான தேவை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு விலையை 145 ரூபாய் மட்டும் உயர்த்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை சுமார் 100 டொலர்களில் அதிகரித்துள்ளதாகவும் கடந்த மாதம் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் எரிவாயுவிற்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தொடர்ச்சியாக விநியோகம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.