Date:

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட அவலம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட கனூலா மருத்துவ உபகரணத்தினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பமப்படுகின்றது.

கனூலா மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டமையால் கை நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால் கைக்கு இரத்த ஓட்டம் செல்ல முடியாமல் கை செயலிழந்துள்ளது. இதன் காரணமாகவே கையை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இரவு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் சிறுமிக்கு கனூலா  போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி தனக்கு கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளதாக சிறுமி முறையிட்டுள்ளார். அடுத்தநாள் கை வீக்கமடைந்ததையடுத்து கனூலா மருத்துவ உபகரணம் அகற்றப்பட்டுள்ளது.

பின் சோதனை செய்ததில் கையிற்கு இரத்த ஓட்டம் இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாத காரணத்தால் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...