Date:

விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா- எல்1 (நேரலை)

ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் – 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்து உள்ளது.

சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற இடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவுவதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள்...