பொல்பிட்டிய நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தக்கவைக்க நீர் கட்டுப்பாட்டுச் செயலகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குடிநீர் தேவைக்காக பொல்பிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் நீரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தக்கவைக்க அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
நுகர்வோருக்கு நீர் வழங்கும் 39 நீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக 42 நீர் விநியோக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அனோஜா களுஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.