
மாத்தறையில், வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை வரவழைத்து பணம் பெறுவதற்காக தந்தை தனது பிள்ளைகள் இருவரை கொடுமைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
03 மற்றும் 05 வயதுடைய இரண்டு மகள்களை கொடூரமான முறையில் தாக்கி தொங்கவிட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உள்ளானதாக கூறப்படும் 2 சிறுமிகளையும் பொலிஸார் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்கள் கடுமையான உடல் மற்றும் மன உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
உள்நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு, இரண்டு சிறுமிகளும் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சிறுமிக்கு சுமார் 05 மாதங்கள் இருக்கும் போது தாய் வெளிநாடு சென்றதாகவும் அதன் பின்னர் பாட்டியும் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பின்னரே தந்தை சிறுமிகளை வளர்த்துள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சந்தேகநபர் வீட்டில் கூறைப்பகுதியில் பிள்ளைகளை தொங்கவிட்டு தாக்கியதுடன் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
அதற்கமைய, சந்தேக நபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் தந்தை போதைக்கு அடிமையானவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


                                    




