தினகரன் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக அனுசரணைகளுடன் சங்கவி பிலிம்ஸ் நிறுவனம் மாதா மாதம் ஒவ்வொரு ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வினை நடத்திவருகின்றது. இதில் முதலாவதாக கலைஞர் எஸ். என் .நடராஜவும் இரண்டாவதாக கலைஞர் ஜோசப் பர்னாந்துவும் கௌரவிக்கப்பட்டனர் .
எதிர்வரும் 30 ஆம் திகதி மூன்றாவது ஆளுமை கௌரவிக்கப்படவுள்ளார். இந்நிகழ்வு வழமைப்போல் கொழும்பு 11, புறக்கோட்டை , ஐந்துலாம்பு சந்தியிலுள்ள கொழும்பு பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது .துரைராசா சுரேசை தலைவராகக் கொண்டு இயங்கும் சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்துடன் B.S.P . கலைஸ்ரீயை தலைவராகக் கொண்டு இயங்கும் கலைஸ்ரீ கலை மன்றமும் S. விஜேராஜை தலைவராக கொண்டு இயங்கும் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியமும் இணைந்து மாதா மாதம் இவ்விழாவை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது .