Date:

கண்டி பெரஹராவுக்கு வாளுடன் புகுந்த கொழும்பு நபரால் பரபரப்பு

கண்டி பெரஹரா ஊர்வலம் சென்ற வீதிக்குள் பயணப் பையில் வாள் ஒன்றை மறைத்துக்கொண்டு நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர் இந்த வாளை ஒரு பையில் எடுத்துச் சென்றதை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், எதற்காக வாளை எடுத்து வந்தீர்கள் என வினவியபோது, ​​சந்தேகநபர் நண்பர் ஒருவர் இதனை தலதாவுக்கு காணிக்கையாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட...