Date:

இந்தியா – இலங்கை விமானப் பயணங்கள் ஆரம்பம்!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாராந்திர விமானங்களும் இயக்கப்படும்.

ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுக்கு விமானங்கள் நாளை (31) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...