Date:

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் போலந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி பொது மக்களிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் கொழும்பு -05 இல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 55 வயதுடைய வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே வெளிநாடு செல்ல காத்திருப்போர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...