மருத்துவ மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாஎல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர் இன்று நீதிமன்றத்தில் முன்னைப்படுத்தப்படவுளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW