இன்று (11) டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), டி.பி.ஜெயா மாவத்தை (டலி வீதி), ஒராபிபாஷா மாவத்தையிலிருந்து டெக்னிக்கல் சந்தி ஒல்கெட் மாவத்தை ஊடாக கோட்டை புகையிரத நிலையம் வரையில் நடைப்பயணம் ஒன்றை நடாத்துவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளுக்கு அமைய அதனைத் தடை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (11) 12 மணி முதல் நாளை (12) 12 மணி வரை மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), டி.பி.ஜெயா மாவத்தை (டலி வீதி), ஒராபிபாஷா மாவத்தை, மருதானையிலிருந்து டெக்னிக்கல் சந்தி ஒல்கெட் மாவத்தையின் இறுதி வரை பயணிகள் மற்றும் சாரதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிராக பாகொட விஜித வங்சதேரர், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரத்நாயக்க முதியன்சேல மற்றும் தரிந்து அமில உடுவரகெதர உட்பட 11 பிரதிவாதிகள் மற்றும் பங்குபற்றும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.