மருந்து ஒவ்வாமை காரணமாக அண்மையில் உயிரிழந்தவர்களின் மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இக் குழுவின் தலைமை உறுப்பினரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர, குழுவின் அறிக்கை குறித்து இன்று (10) விளக்கமளித்தார்.
இதன்போது மருந்து ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW