நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் செயலாளர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW