Date:

மீண்டும் எரிபொருள் வரிசை தொடர்பில் ரணில் (பகிரங்க எச்சரிக்கை)

மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை,உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று(04) இடம்பெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் எரிபொருள் வரிசை: ரணில் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை | Fuel And Diesel Price In Sri Lanka Sl Presidentஅதற்காக எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், பிற்பட்ட காலங்களில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை முன்னெடுப்பதற்கான பல உதவிகளை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால், வெளிநாடுகள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாது. மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும்.

அரச நிதி நிர்வாகம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும். நாடாளுமன்றத்தின் பொறுப்புக்களை நாடாளுமன்றமே நிறைவேற்றும் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...