Date:

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்சுலின் வழங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட விநியோகஸ்தர், தேவையான அளவு இன்சுலின் வழங்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

தட்டுப்பாடு காரணமாக மேலும் இரு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்சுலின் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இன்சுலின் அடங்கிய 50,000 பொதிகள் அவசர கொள்வனவாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் குறித்த பங்கு இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...