Date:

வரக்காப்பொல விபத்தில் பெண் பலி : 10 பேர் காயம் !

வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை  காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மற்றும், எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...