Date:

விமானநிலையத்தில் அதிரடியாக கைதான இலங்கையர்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் இலங்கையர் கொண்டு சென்ற சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்தனர், மேலும் ஆய்வு செய்ததில், பையில் 10.294 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சந்தேகத்தின் பேரில் இலங்கையை சேர்ந்தவரை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்திற்குரிய இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் (ANF) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking:கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு...

ரணில் விளக்கமறியலில் அடைப்பு…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

Breaking ரணிலுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றம் ரணிலுக்கு பிணை வழங்கியது. அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...