மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிக Pfizer தடுப்பூசிகள் இன்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இவை, கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்சினால் சுகாதார அமைச்சரிடம் இவை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு 02 தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆகஸ்ட் 26 ஆம் திகதியளவில் சனத்தொகையின் 25 வீதமானோருக்கு இரு தடுப்பூசிகளையும் வழங்க முடிந்ததாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.






