Date:

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு : வெளியான பகீர் தகவல்

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது ​​அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பாடசாலை அமைப்பில் நாம் அடிக்கடி புகையிலை பாவனையை பார்க்கிறோம். வீட்டிலேயே புகையிலையைச் செய்து சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் பழக்கம் மாணவர்கள் இடையே காணப்படுகின்றது. புகையிலையால் ஏற்படும் போதைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளதாக” தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...