50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது.
புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கும் முயற்சியில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW