Date:

பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபரால் பரபரப்பு

புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் நபர் ஒருவர் விஷம் அருந்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரின் 25 வயது மனைவியுடன் சிறிது காலமாக தகராறு இருந்து வந்த நிலையில் இது குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மனைவியின் பின்னால் குறித்த நபரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

மனைவி முறைப்பாடு செய்யும் போது மறைத்து வைத்திருந்த விஷப் போத்தலை எடுத்து குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு விஷப் போத்தலை பறித்து பின்னர் இந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்விலதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பணியிடத்தில் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு 4 வயதில் ஒரு பிள்ளை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் சில காலமாக தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மனைவி புபுரஸ்ஸ பொலிஸில் இதற்கு முன்னர் 6 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் 7வது தடவை முறைப்பாடு செய்யும் போதே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப்...

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது...

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை...