பல பிரதேசங்களில் நிலவும் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இருந்து கூட அரிசியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.