Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு – பிரான்ஸ் ஜனாதிபதி (Pics)

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பபுவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து, நாடுதிரும்பும் வழியில், அவர் இலங்கைக்கு வருகைதந்தார்.

பபுவா நியூகினியாவிலிருந்து பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம்  நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்த நிலையில், இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாமும், 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...

மதுபான வரி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பு

மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான...

தங்கத்தின் விலையில் எதிர்பாராத பாரிய மாற்றம்

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. அதன்படி,...

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!!

கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...