Date:

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் அதிபர்களூடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் சுயமாகவும் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை தரவேற்றியமைக்கான அத்தாட்சியை பிரதியெடுத்து அல்லது தரவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களை 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அல்லது 0112 78 42 08, 011 2 78 45 37, 011 2 78 66 16 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கால நீடிப்பு வழங்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...