களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் சடலம், கடற்கரையில் இருப்பதால், அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW