பாடசாலை மாணவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் தங்காலை கோயம்பொக்க பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரசபை ஊழியர் ஆவார்.
கந்தர பெலிவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய 16 வயது பாடசாலை மாணவன் கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW