Date:

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த பக்கத்து வீட்டு இளைஞன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீடு ஒன்றில் மலசலகூடம் சென்ற முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துவிட்டு எடுத்துக் கொண்டு அவரை தள்ளி கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடிய அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள இளைஞன் ஒருவரை கைது செய்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

இருதயபுரம் மேற்கு 8 ஆம் பிரிவிலுள்ள முதியவரான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சம்பவதினமான நேற்று 4.30 மணியளவில் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளிபகுதியிலுள்ள மலசலகூடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்திலிருந்த 1 1/2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரை கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமரா மூலம் குறித்த கொள்ளையனை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார் கொள்ளையடிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து 4 ஆவது வீட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்த தங்க சங்கிலியை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373