இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
2022 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியை முறைகேடான வகையில் செலவு செய்தமையைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகம் தமக்கு சாதகமான வகையில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த நிதி முறைகேடு தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் முன் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW