நடப்பு ஆண்டு (2023) ஹஜ் யாத்திரை நிறைவு பெற்றதன் பின்னர் இலங்கை நாட்டில் இருந்து முதல் உம்ரா பயணிகள் குழுவொன்று நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று (27) அதிகாலை சவூதி நாட்டை சென்றடைந்துள்ளனர்.
இந்த உம்ரா யாத்திரியர்கள் தற்போது மக்கமா நகரை சென்றடைந்துள்ளதாகவும் அவர்கள் சிறந்த முறையில் உம்ரா கடமைகளை நிறைவேற்றிவருவதாகவும் அங்குள்ள நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பயணிகள் குழுவினர் யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் மூலம் சென்றடைந்துள்ளனர்.
கடந்த பல வருடங்களாக யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் இலங்கை மக்கள் மத்தியில் ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் அபிமான நம்பிக்கையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW