பேலியகொட மெனிக் சந்தையில் வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (26.07.2023) முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தபோதும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW