மொரட்டுவயில் பெண் ஒருவர் கணவரை தீயிட்டு கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மொரட்டுவ, மொரட்டுமுல்ல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவரை எரியூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த கணவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW