Date:

மகன் கொலை – தந்தை கைது

கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில், இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...