காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து, கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் இரு மகன்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW