Date:

வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டம்

வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 2.5 வீதமானவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாத நிறைவிற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசியை ஏற்ற முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியூப தூதுவரை நேற்று சந்தித்த போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னர், மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...