தம்புத்தேகமவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மதுபோதையில் பாதையில் படுத்து உறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம – நொச்சியாகம பகுதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வீதியில் உறங்கிய பொலிஸ் உத்தியோகத்தரை சிலர் பார்வையிட்டுள்ளதுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பெரும்பாலான போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரியாக செய்யாமல் இலஞ்சம் வாங்குதல் போன்ற பல சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டுள்ளதுடன் இதனால் சாரதிகளின் பொறுப்பற்ற தன்மை அதிகரித்து தொடர்ச்சியாக பல வீதி விபத்துக்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW


 
                                    




