Date:

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பற்றிய விசேட அறிவித்தல்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் திட்டத்தின் கீழ் 679 மருந்துகளுக்கான கொள்வனவுக்காக அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 278 மருந்துகள் தற்போது நாட்டின் சுகாதார அமைப்பில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, பயன்படுத்தப்படும் மருந்துகள் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...