Date:

குடும்ப வறுமையை போக்க வெளிநாடு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை!

லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற இளம் குடும்ப பெண், தன் குடும்ப வறுமையை போக்குவதற்காக அரபு நாடு சென்ற நிலையில் அங்கு கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த , கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றார்.

அந் நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிய தாய் அது தொடர்பான தகவல்களை தனது கணவனுக்கு தொலைபேசி ஊடாக வழங்கியுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மனைவி தன்னை கடுமையாக தாக்கி குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி உள்ளதாகவும் தான் பெரும் சிரமப்படுவதாகவும் கணவனிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

துன்புறுத்தல்களை தன்னால் தாங்க முடியவில்லை என்றும், உடனடியாக இலங்கைக்கு எடுக்குமாறு சிவரஞ்சனி தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்தார்.

வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் சம்பவம் தொடர்பாக பல முறை கதைத்தபோதிலும் உபதரகர் அச்சுறுத்தல் கொடுத்ததாக கூறுகின்றார்.

எனினும் சிவரஞ்சனி சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் வந்துள்ளார். பணியகத்தில் இருந்த அதிகாரி சிவரஞ்சனிக்கு உதவி வழங்கியதோடு கழுத்தில் இருந்த குண்டு ஊசி ஒன்றினை அகற்றிய பின்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 14 ஆம் திகதி அன்று இலங்கைக்கு காலை 6 மணிக்கு வந்த நிலையில், உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குன்டூசிகள் இருப்பது தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிவரஞ்சனியின் உடம்பில் இருந்து இதுவரை 4 குண்டூசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் சிவரஞ்சனியின் கணவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...