Date:

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில்

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது.

வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளது.

இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் கொண்ட சிறுவர் இதய நோய் பிரிவொன்றை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...