Date:

மன்னம்பிட்டி விபத்து; பஸ் தொடர்பில் வெளியான செய்தி

மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் குறித்த பஸ் உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11)  இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ND7804 இலக்கம் கொண்ட குறித்த பஸ் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையால் , 2018ஆம் ஆண்டு குறித்த பேரூந்துக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திய பின்னரும் அவர் இவ்வாறான தவறை இழைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பங்களாதேஷை T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கிய ICC!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...