Date:

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, 91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5% குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4% குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகள்!

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகளின் பட்டியல் இதோ.. ...

இலங்கை வந்த ரஷ்யா உதவி விமானம்!

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம்...

பதுளை மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத்...

எஞ்சியுள்ள உயர்தரப் பரீட்சை மீள் ஆரம்பத் திகதி இதோ!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...