Date:

பால்மா விலை குறையாது- இறக்குமதியாளர்கள் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கம் வௌியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போதுள்ள விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை, இன்னும் கையிருப்பில் உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இறுதியாக, கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பால்மாவின் விலை குறைக்கப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று வர்த்தக அமைச்சர் அறிவித்திருந்தார்.

எனினும், வர்த்தக அமைச்சரின் இந்த அறிவிப்பை மறுத்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம், பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...