அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட பிரியத் நிகேஷல என்பவரை தலங்கம் கொஸ்வத்த பிரதேசத்தில் வைத்து தாக்கி அவரின் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.