Date:

ரிஷாட் பதியுதீனிடம் சிறைச்சாலை தீர்ப்பாயம் விரைவில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மெகசின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகரின் பரிந்துரைக்கு அமைய, தீர்ப்பாய விசாரணையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 87-இன் முதலாம் பிரிவிற்கு அமைய, சிறைச்சாலைக்குள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை, சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய, வைத்தியரை அச்சுறுத்தியமை தொடர்பான விடயத்தை தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் நீதவான் ஒருவரினால் சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போக்குவரத்து அபராதங்களை உடனுக்குடன் செலுத்தும் புதிய வசதி!

எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை...

வெனிசுலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி கைது!

அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை...

வருமானத்தில் சாதனை படைக்கும் பின்னவல யானைகள் காப்பகம்!

பின்னவல யானைகள் காப்பகம் கடந்த ஆண்டில் 1042 மில்லியன் ரூபாய் வருமானத்தை...

இன்று இரவு தோன்றும் ‘சூப்பர் மூன்’

இந்த ஆண்டின் முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று இரவு வானில்...