உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கையர்கள் 30 பேரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது.
இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது.இதையொட்டி இலங்கை வெளிவிவாகார அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
We have been closely following the situation of Sri Lankans in #Sudan & are actively working on their safe #evacuation. We appreciate the offer of support by #India in this regard. We are confident we can achieve this within the next few days @MFA_SriLanka
— M U M Ali Sabry (@alisabrypc) April 25, 2023
சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களில் அவர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.