நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலைகாரணமாக வாகனங்களின் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம் உள்ளதால் அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் பகிரப்படுகிறது.
அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என தெரிவித்துள்ளது.