யாழ். கஸ்தூரியார் வீதியில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டு ஒன்றினை வீசப்பட்டுள்ளது.
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் கடையொன்றின் மீது அடையாளம் தெரியாத சிலர் நேற்றிரவு (18) வெடிகுண்டு ஒன்றினை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாகன திருத்தகத்தில் தரித்துநின்ற கார் ஒன்றின் மீது வெடிகுண்டு வீழ்ந்து வெடித்ததால் அதற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வெடி குண்டு உள்நாட்டில் தயாரித்திருக்கலாம் எனவும், அது பாரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியது அல்ல என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.