Date:

வாழ்த்துவதாக தெரிவித்து முத்தம் கொடுத்த அதிபர் கைது

தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்த பிரதேசத்தில் வசிக்கும்  இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 61)  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 23 வயதான ஆசிரியை அளித்த முறைப்பாட்டின் பெயரில் சந்தேக நபரான அதிபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று குறித்த ஆசிரியை பணிகளை முடித்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமான போது புதுவருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி சந்தேக நபரான அதிபர் வலுக்கட்டாயமாக ஆசிரியையை முத்தமிட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...