அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை பாடசாலை விடுமுறை என தகவல் பரவிவருகிறது.வெறும் வதந்தி
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவல் பகிரப்படுகிறது.
இது வெறும் வதந்தி எனக் கூறும் கல்வி இராஜாங்க அமைச்சர், நாளை(17) வழமைபோல பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.